Monday, March 26, 2007




Thiruppullani Panguni Brummothsavam 3rd day
(26/3/2007)

Sri Adhi JagannAtha PerumAL
Thiruveethi PuRappAdu on Hanuma vAhanam



அனுமன் (சிறிய திருவடி) வாகனம்






வேணியரனும் வாயுவும் வடிவ மொன்றாகி

மேதினி யிடத் துதித்து
வெய்யோனை யினிய செங்கனியென வெடுத்
துவிளையாடி ராகவனுக் கடிமையா
யாணவ மலமூத்திர சாமிய மடக்கியே
ஐந்திர வியாகரண நிபுணனான
யஞ்சனா தேவி பாலகனாக வானரர்க்
கமிர்த சஞ்சீவி கொணர்ந்
தூணுறக்க மின்றி யிருந்த சானகிக்கினிய
வுரிய திருவாழி நல்கி
யுத்தம தேவிக்கும், பரதனுக்கும், மன
துவந்து சோபன முரைத்த
சேணுயர்ந் திலகு வெள்ளியங் கிரியைநிக
ரெனச் சிறந்த மாருதி புயத்தில்
திகழுமணி மேடைசூழ் புல்லாணி வீதிவரு
தெய்வச் சிலைக் கடவுளே.
__________________________________________________________________________

அனுமத் வாகனம்

சிவபெருமான், வாயு இவர்களின் அம்சமாய் மண்ணுலகில்
அவதரித்தவரும், அவதரிக்கும்போதே பசியால் உதிக்கும் இளம்
கதிரவனைப் பழுத்த கனி என நினைத்துத் தாவிப் பிடித்து விளை
யாடியவரும், சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு தாஸனாகத்
திகழ்ந்தவரும்,இந்திரியங்களை வென்றவரும், ஐந்திர வியாகரணம்
எனும் வடமொழி இலக்கண நூலறிஞரும், அஞ்ஜனாதேவியின்
திருமகனாய்த் தோன்றியவரும், குரங்குப்படையின் இடையே
சஞ்சீவி மலையைக் கொணர்ந்தவரும், உண்ணாமலும்,
உறங்காமலும் இலங்கை அசோக வனத்தில் வருந்தி நின்ற
சீதைக்குக் கணையாழி தந்தவரும், சீதைக்கும், பரதனுக்கும்
இராமன் எழுந்தருளப்போகும் நற்செய்தியை உரைத்தவரும்,
கைலையங்கிரி போன்றவருமான சிறிய திருவடியாகிய
அனுமனது திருத்தோளில் அமர்ந்து திருப்புல்லாணித்
திருவீதியிலே பவனி வரும் எங்கள் தெய்வச்சிலைக்
கடவுளே நீ வாழி !

No comments: