Thursday, February 14, 2008

Thirukkoshtiyur
DateDayUthsavam Details
DateDayUthsavam Details

பத்திரிகை அடியேனுக்குக் கிடைக்காததால் 13/2/08 “தினத்தந்தி” நாளிதழில் வந்த செய்தியைக் கொடுத்துள்ளேன். 12/2 அன்று கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கியுள்ளது.

தாஸன்,
ரகுவீரதயாள்

தினத்தந்தி செய்தி

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கொடியேற்று விழா

சிவகங்கை,பிப்.13-

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கொடியேற்றம் நேற்று நடை பெற்றது.

சவுமிய நாராயண பெருமாள்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு சொந்தமான சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டது. இந்த கோவிலின் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று(12/2/08) காலையில் சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 11.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. லண்டன் மாதவன் பட்டாச்சாரியார்தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைத்தனர்.

இரவு சவுமிய நாராயண பெருமாள் திருவீதி உலா வந்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 2-வது திருவிழாவான இன்று சிம்ம வாகனத்திலும், 3ம் திருவிழாவன்று அனுமார் வாகனத்திலும், 4ம் திருவிழாவன்று தங்ககருட சேவை வாகனத்திலும், 5ம் திருவிழாவன்று சேஷவாகனத் திலும் பெருமாள் ஸ்ரீதேவி, பூமா தேவியருடன் வலம் வருவார்.

திருக்கல்யாணம்

6ம் திருவிழாவன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 7ம் திருவிழாவன்று தங்க பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிஅளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 8ம் திருவிழாவன்று குதிரை வாகனத்திலும், 9ம் திருவிழாவன்று வெண்ணைதாழி கிருஷ்ணர் அலங்காரத்திலும் பெருமாள் திருவீதி உலா வருகிறார்.

21-ந்தேதி 10ம் திருவிழாவன்று தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு ஒரு முறையும், இரவு 11 மணிக்கு 3 முறையும் தெப்பத்தில் பெருமாள் வலம் வருவார். அன்று தங்க பல்லக்கில் பெருமாளை தெப்பத்தில் அழைத்து வருவார்கள். ஸ்ரீதேவி, பூமாதேவி யுடன் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெப்பத்திற்கு வேதபாராயணம், திவ்யபிரபந்தம் முழங்க மேளதாளத்துடன் தெப்பத்தையொட்டியுள்ள மண்டபத்திற்கு அழைத்து வரப்படுவார். அங்கு விசேஷ பூஜை நடைபெறும். பக்தர்களுக்கு அங்கிருந்தபடி பெருமாள் ஆசி வழங்குவார். அன்று ஒருநாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

ஏற்பாடுகள்

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், லண்டன் மாதவ பட்டாச்சாரியார் மற்றும் சவுமிய நாராயண எம்பெருமாள் சாரிடபிள் டிரஸ்டியினர், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.விழாவில் கோவில் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டி யன் மற்றும் ஸ்தானியர்கள் கலந்து கொண்டனர்.

No comments: